ஜார்ஜ்டவுன், செப்டம்பர்.28-
பேரா மாநிலத்தின் 'கெராக்கான்' கட்சி, கூட்டணிக் கட்சியான 'பாஸ்' தலைவர்களின் விமர்சனங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பத் தயாராகி வருகிறது! பாஸ் தலைவர்களின் பகிரங்க விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்காமல் 'கெராக்கான்' மௌனம் காப்பதால், கட்சி உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவதாகப் பினாங்கு கெராக்கான் இளைஞர் பிரிவுத் தலைவர் டான் ஸென் ஸுன் கூறியுள்ளார்.
பாஸ் கட்சியின் விமர்சனங்களைச் சமாளிக்காமல் அமைதியாக இருப்பது கடினம் என்றும், இந்தக் கூட்டணியில் தாங்கள் ஒரு சமநிலைப்படுத்தும் சக்தியாக இருக்க முடியும் என்பதைச் சிறுபான்மையினருக்குக் காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கட்சியின் புதிய முழக்கமான 'சாய் யோக் ' என்பது சீன மொழியில், அது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அதை மாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.