Aug 28, 2026
Thisaigal NewsYouTube
பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
அரசியல்

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

Share:

வரும் அக்டோபர் 24-ஆம் தேதி, 16-வது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி ஒன்றை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடிய அது போன்ற அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய அத்தகவலின் படி, வரும் அக்டோபர் 10-ஆம் தேதி, வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும், அக்டோபர் 24-ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

16-வது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் ஆணையத்தின் வரைவு கால அட்டவணை இவ்வாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News