Aug 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் கோட்டையை மீண்டும் மீட்ட பாரிசான் நேஷனல்: இமாலய வெற்றியோடு ஆட்சியைத் தக்க வைத்தது
அரசியல்

ஜோகூர் கோட்டையை மீண்டும் மீட்ட பாரிசான் நேஷனல்: இமாலய வெற்றியோடு ஆட்சியைத் தக்க வைத்தது

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

இன்று நடைபெற்ற ஜோகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலில், கடுமையான பல்முனைப் போட்டிகள் உட்பட 56 தொகுதிகளிலும் நேரடி களம் கண்ட கூட்டணிகளில், பாரிசான் நேஷனல் 30 இடங்களுக்கும் மேல் கைப்பற்றி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 56 தொகுதிகளில் ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்வதற்குத் தேவையான 31 இடங்களுக்கும் மேல் வாரிக் குவித்து, பாரிசான் நேஷனல் கூட்டணி இமாலய வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் ஜோகூர் மாநிலத்தில் பாரிசான் நேஷனல் தனது பலமிக்க ஆட்சியைத் தங்குதடையின்றி மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

இம்மாநிலத்தின் பாரிசான் நேஷனல் தலைவரான டத்தோ ஒன் ஹஃபீஸ் காசி, தனது மாச்சாப் (Machap) சட்டமன்றத் தொகுதியில் எதிர்த்தப் போட்டியிட்ட வேட்பாளர்களைப் பின்னுக்குத் தள்ளி, மிக பிரம்மாண்டமான பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, டத்தோ ஒன் ஹஃபீஸ் காசி மீண்டும் ஜோகூர் மாநிலத்தின் மந்திரி பெசாராக நியமிக்கப்படுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அக்கூட்டணி வெற்றி பெற்ற தொகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிக அதிகமான வாக்குகள் பதிவாகி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மகத்தான வெற்றியை மகுடமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து