Jul 11, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தலில் 2 மணி நிலவரப்படி, 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு: 48.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
அரசியல்

ஜோகூர் தேர்தலில் 2 மணி நிலவரப்படி, 1.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்களிப்பு: 48.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூர் மாநிலத் தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 48.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின் படி, இன்று காலை முதல் 1.3 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.

இந்நிலையில், மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளும் மாலை 6 மணியளவில் மூடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனிடையே, வாக்குப் பதிவு சுமுகமாகவும் ஒழுங்காகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் ஆணையத்தின் தலைவர் Datuk Seri Ramlan Harun, நகரில் உள்ள நான்கு வாக்குப்பதிவு மையங்களை இன்று நேரில் ஆய்வு செய்தார்.

காலை 8.50 மணியளவில், ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட Dewan Raya Taman Ungku Tun Aminah வாக்குப் பதிவு மையத்தில் தனது ஆய்வை அவர் தொடங்கினார்.

வாக்காளர்களுக்கான வசதிகள், வாக்குப் பதிவு நடைமுறை மற்றும் தேர்தல் பணியாளர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனிடையே, Balai Raya Pulau Besar வாக்குச் சாவடியானது, வாக்குப் பதிவு நிறைவடைந்து முதலில் மூடப்பட்ட மையமாக பதிவாகியுள்ளது.

இது குறித்து Tenggaroh தொகுதி தேர்தல் அதிகாரி Jamil Hasni Abdullah கூறுகையில், ஒரே ஒரு வாக்குப் பதிவு அறையைக் கொண்ட இந்த வாக்குச் சாவடியில் 32 பேர் மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாக இருந்ததால், காலை 11 மணிக்கே வாக்குப் பதிவு நிறைவடைந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், Balai Raya Pulau Aur மற்றும் Sekolah Kebangsaan (SK) Pulau Pemanggil வாக்குச் சாவடிகள் நண்பகல் 12 மணிக்கும், Balai Raya Pulau Sibu மற்றும் SK Pulau Tinggi வாக்குச் சாவடிகள் பிற்பகல் 2 மணியளவிலும் மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News