ஜோகூர் பாரு, ஜூலை.11-
வாக்காளர்கள் shorts எனப்படும் கால் சட்டை அணிந்து வாக்களிக்க வருவதற்கு எந்த அதிகாரப்பூர்வ ஆடை விதிமுறையும் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் வெளியிட்டுள்ள தகவலில், அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களின் சின்னங்கள் இடம்பெற்ற ஆடைகளைத் தவிர வேறு எந்த ஆடை கட்டுப்பாடும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஷார்ட்ஸ் அல்லது நீளக் கால்சட்டை தொடர்பாக எந்த ஆடை விதிமுறையும் இல்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்கூடாயில் உள்ள SMK துன் அமினா பள்ளியில், மஞ்சள் நிற டி-ஷர்ட்டும் காக்கி நிற ஷார்ட்ஸும் அணிந்து வந்த ஒருவர் பாதுகாப்பு பணியாளர்களால் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்பட்ட முகநூல் பதிவு வைரலானதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.








