ஜோகூர் பாரு, ஜூலை.11-
ஜோகூர் மாநிலத் தேர்தலில், வாக்குப் பதிவு நிறைவடைய ஒரு மணி நேரம் இருந்த நிலையில் மாலை 6 மணி நிலவரப்படி வாக்குப் பதிவு 70 விழுக்காட்டை எட்டியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் வாக்களித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது, அண்மைக் கால வரலாற்றில் மிகக் குறைந்த வாக்குப் பதிவாகப் பதிவான 2022 ஜோகூர் தேர்தலின் ஒட்டுமொத்த 54.9 விழுக்காட்டை விடக் கூடுதலாகும். தேர்தல் ஆணையத்தின் கணிப்புப்படி இந்தத் தேர்தலில் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.








