Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தேர்தல் விதிமீறல்: ஸ்கூடாய் தொகுதி பாரிசான் நேஷனல் வேட்பாளர் மீது ஜசெக தலைவர் குற்றச்சாட்டு
அரசியல்

தேர்தல் விதிமீறல்: ஸ்கூடாய் தொகுதி பாரிசான் நேஷனல் வேட்பாளர் மீது ஜசெக தலைவர் குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதியின் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிகோல் டான் ஹியாங் கீ தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஜசெக கட்சியின் அனைத்துலக விவகாரச் செயலாளர் கஸ்தூரி பட்டு குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தேர்தல் ஆணையமும் போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

வாக்குப்பதிவு நடைபெற்ற இன்று, SMK தாமான் துன் அமீனா இடைநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிக்கு முன்பாக நிகோல் டான் ஹியாங் கீக்குச் சொந்தமான வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அதில் தேர்தல் பிரச்சாரப் பதாகைகள் மற்றும் கட்சியின் சின்னம் ஒட்டப்பட்டிருந்ததாகவும் கஸ்தூரி பட்டு தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடிக்கு அருகில் எந்தவொரு கட்சிச் சின்னத்தையோ பிரச்சாரப் பொருட்களையோ காட்சிப்படுத்துவது சட்டவிரோதமாகும்.

இத்தொகுதியில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் நிகோல் டான் ஹியாங் கீ, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் மற்றும் இதர வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்டனர்.

Related News

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார்  வரவேற்பு

பிகேஆர் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகல்: அன்வார் வரவேற்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெரிக்காத்தான் நேஷனல்' கூட்டணியில் இருந்து பெர்சத்து நீக்கம்? ஹாடி அவாங்கிற்கு அஸ்மின் அலி மறுப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

பெர்சத்து கட்சி பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலிருந்து தானாகவே வெளியேறியது: ஹாடி அவாங் அதிரடி அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

திரங்கானு மாநில பெர்சாத்து தலைவர் பதவியில் இருந்து ரஸாலி இட்ரிஸ் ராஜினாமா

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்

பல்கலைக்கழகங்களில் இணையும் மாணவர்களுக்கான 1,000 ரிங்கிட் கல்விப் பரிசு: பயன் அடையும் மாணவர்களின் எண்ணிக்கையை 5,000 ஆக உயர்த்த சிலாங்கூர் அரசு திட்டம்