Aug 28, 2026
Thisaigal NewsYouTube
செங்காராங் சட்டமன்றத் தொகுதியில் கள்ள வாக்குகள் புகார்
அரசியல்

செங்காராங் சட்டமன்றத் தொகுதியில் கள்ள வாக்குகள் புகார்

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூர் மாநிலத் தேர்தலின் செங்காதாங் சட்டமன்றத் தொகுதியில் கள்ள வாக்குகள் பதிவாகியுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஓன் அபு பாக்கார் குற்றம் சாட்டியுள்ளார்.

இன்று காலை 10.30 மணியளவில் SMK செங்காராங் இடைநிலைப்பள்ளியில் வாக்குச் சாவடியில் இந்தச் சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது. 25 வயது மதிக்கத்தக்க ஆண் வாக்காளர் ஒருவர் வாக்களிக்கச் சென்ற போது, அவரது பெயரில் ஏற்கனவே மற்றொருவர் வாக்களித்துச் சென்றது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட வாக்காளர் காலை 11 மணியளவில் செங்காராங் போலீஸ் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார். இப்புகார் குறித்து தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

Related News