15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரசாக் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
வேட்புமனுத் தினத்திற்கான மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வார கால அவகாசம் அனைத்துக் கட்சிகளுக்கும் அந்தந்த கட்சிகளின் பணிகளைச் செய்ய போதுமானதாக கருதப்படுவதாக பினாங்கு மாநில முதல்வர் சொவ் கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, பினாங்கு மாநிலத்தில் பகாத்தான் ஹரப்பான் 33 தொகுதிகளையும், பரிசான் நெஷ்னல் 2 தொகுதிகளையும்,பெர்சத்து 4 தொகுதிகளையும்,பாஸ் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
