Oct 15, 2026
Thisaigal NewsYouTube

சட்ட நடவடிக்கைக்கு ஆளாகிறார் பாஸ் கட்சியின் மற்றொரு தலைவர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

பெட்டாலிங் ஜெயா, ஜன.28-

இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ, மலேசியாவின் முன்னணி மேம்பாட்டாளர் நிறுவனமான YTL Corporatiom Berhad-டின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று அண்மையில் பகிரங்கமாக அறிவித்த பாஸ் கட்சியின் பேரா மாநில தலைவர் ரஸ்மான் சகாரியா, சட்ட நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார்.

ரஸ்மான் சகாரியாவுக்கு வழக்கறிஞர் நோட்டீஸை சார்வு செய்வதற்கு தமது வழக்கறிஞர் தயாராகி விட்டதாக ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்மான் சகாரியா, அண்மையில் தமது உரையில் சிகாம்புட் எம்.பி.யான ஹன்னா இயோ, YTL நிறுவனத்தின் உரிமையாளரின் மகள் என்றும் கோடீஸ்வரரின் மகள் என்றும் அறிவித்து இருந்தார்.

எனினும் தாம் இவ்வாறு கூறியதற்காக, ரஸ்மான் சகாரியா மன்னிப்பு கேட்டுக்கொண்ட போதிலும், அதே உரையில் ஹன்னா இயோவிற்கு எதிராக அவதூறு தன்மையில் கூறியதற்காக அவருக்கு எதிராக அந்த பெண் எம்.பி. சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

தங்களை மதவாதிகள் என்று கூறிக்கொண்டு, மற்றவர்கள் மீது கண்மூடித்தனமாக குற்றச்சாட்டை முன்வைத்து அவதூறு செய்து வரும் நபர்களை இனி விடக்கூடாது என்று ஹன்னா இயோ சூளுரைத்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →