Nov 27, 2025
Thisaigal NewsYouTube
சபா தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது
அரசியல்

சபா தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.27-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஆருடம் கூறியுள்ளார்.

எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ தனியாக ஆட்சி அமைக்கும் அளவிற்கு சபாவில் நிலைமை இல்லை என்று ஆகக் கடைசியான நிலவரங்கள் காட்டுவதாக துணைப்பிரதமரான அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

இந்த 17 ஆவது சட்டமன்றத் தேர்தலில் சபாவின் ஆட்சியை முன்னெடுக்க எந்தவொரு கட்சிக்கும், மற்ற கட்சிகளின் தோழமை தேவைப்படும். பல கட்சிகள் இணைந்து ஓர் அரசாங்கத்தை தேர்வு செய்யும் நிலைமை சபாவில் ஏற்படலாம் என்று அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

சபாவின் நிலைத்தன்மையை உறுதிச் செய்வதற்கு பல கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என்று நேற்று இரவு சபா, கோத்தா கினபாலு, இனாமான் என்ற இடத்தில் சபா, இந்திய சமூகத்தினருடனான சந்திப்பு நிகழ்வில் உரையாற்றுகையில் அஹ்மாட் ஸாஹிட் இதனைக் குறிப்பிட்டார்.

சபா மாநிலத்தில் முதல் முறையாக பல தொகுதிகளில் 14 முனைப் போட்டிகள் ஏற்பட்டுள்ளன. இது சபாவின் தனித்துவமான அரசியல் ஆளுமையையும், ஜனநாயக மாண்பையும் நிரூபிக்கிறது என்று அஹ்மாட் ஸாஹிட் தெரிவித்தார்.

Related News