கோலாலம்பூர், டிசம்பர்.03-
செனட்டர் பதவிக்கான தவணைக் காலம் காலாவதியானதைத் தொடர்ந்து முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவியை நேற்று டிசம்பர் 2 ஆம் தேதியுடன் இழந்த தெங்கு டத்தோ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ், மீடா என்றழைக்கப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொருளாதாரம் மற்றும் முதலீட்டுத்துறையில் பரந்த அனுபவத்தைக் கொண்ட பொருளாதார நிபுணரான தெங்கு ஸாஃப்ருலின் பதவிக் காலம் இன்று டிசம்பர் 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் ஆட்சிக் காலத்தில் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டு, நிதி அமைச்சராகப் பதவி வகித்த தெங்கு ஸாஃப்ருல், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.








