Aug 26, 2026
Thisaigal NewsYouTube
ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெங்கிரி இடைத் தேர்தல்
அரசியல்

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெங்கிரி இடைத் தேர்தல்

Share:

கோலாலம்பூர், ஜூன் 28-

கிளந்தான், குவா முசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்ற இடைத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 17 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான SPR அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என்று SPR தலைவர் ரம்லான் ஹாருன் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியை சேர்ந்த நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் முகமது அசிசி அபு நைம்,அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தொகுதி காலியானதாக கடந்த ஜுன் 19 ஆம் தேதி கிளந்தான் மாநில சட்டன்ற சபா நாயகர் முகமது அமர் நிக் அப்துல்லா அறிவித்தார்.

Related News