கோலாலம்பூர், டிசம்பர்.06-
சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜசெக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்விக் கண்டு இருப்பது மசீச.விற்கு லாபம் என்று கட்சி உறுப்பினர்கள் கருதக்கூடாது என்று அக்கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மா ஹாங் சூன் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில் மசீச உறுப்பினர்கள் முதிர்ச்சியுடன் செயல்பட வேண்டும். கடந்த பொதுத் தேர்தலில் மசீச படுதோல்விக் கண்டு இருப்பதை மறந்த விடக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
ஜசெக.வின் தோல்வியைத் தங்களுக்கு லாபமாகக் கருதாமல் அடுத்த 16 ஆவது பொதுத் தேர்தலில் மசீச.வை வெற்றிப் பாதைக்குக் கொண்டுச் செல்வதற்கான வழிவகைகளைக் கட்சி உறுப்பினர்கள் ஆராய வேண்டும் என்று டாக்டர் மா கேட்டுக் கொண்டார்.








