Aug 28, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்கத் தூதரக நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் அழைப்பு
அரசியல்

அமெரிக்கத் தூதரக நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் அழைப்பு

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

ஈரான் மீதான தாக்குதலில் வாஷிங்டனின் பங்கைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்கத் தூதரகம் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹான் யோசனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் சுமுகமான உறவைப் பேண அரசு அதிகாரிகள் அத்தகைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது அவசியம் என்பதை ஏற்றுக் கொண்ட அவர், அரசாங்கப் பதவிகளில் இல்லாத மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய இது ஒரு நல்ல வாய்ப்பு என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது குறுக்கிட்டுப் பேசிய ஷாரெட்ஸான் ஜோஹான், அரசாங்கத்தில் எந்தப் பதவியும் வகிக்காத பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கத் தூதரக நிகழ்வுகளைத் தவிர்ப்பதன் மூலம் ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்ல முடியும் என்று கூறினார்.

குறிப்பாக, அமெரிக்காவின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கான அழைப்புகள் வந்தால் அவற்றைப் புறக்கணிப்பதன் மூலம், அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை வெளிப்படுத்தலாம் என்று அவர் வலியுறுத்தினார்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல் குறித்துப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆற்றிய உரையைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தின் போது, ஜசெக. வைச் சேர்ந்த ஷாரெட்ஸான் ஜோஹான் இந்தத் துணிச்சலான கருத்தை முன்வைத்தார்.

Related News

அமெரிக்கத் தூதரக நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும்: நாட... | Thisaigal News