அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாக களம் இறக்குவதற்கு அரசாங்க சேவையில் உயர் பதவி வகித்த முன்னாள் அதிகாரிகளை வளைத்து போடும் நடவடிக்கையில் பெரிக்காத்தான் நேஷனல் ஈடுபட்டு வருகிறது. இதனை பெரிக்காத்தான் நேஷனலில் பொதுச் செயலாளரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் உறுதிபடுத்தியுள்ளார்.
மாநில மற்றும் கூட்டரசு அரசாங்க அளவில் அரசுப்பணியில் உயரியப் பொறுப்பை ஏற்றிருந்து ஓய்வுப்பெற்ற முன்னாள் அதிகாரிகளை இலக்காக கொண்டு தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆற்றல், நேர்மை மற்றும் நம்பிக்கை நிறைந்த அந்த முன்னாள் அதிகாரிகள் பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து கரம் கோர்ப்பது மூலம் அதிகமான தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியுள்ளதாக ஹம்சா ஜைனுடின் தெரிவத்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
