ஜோகூர்பாரு, நவ. 21-
ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஜோகூர் மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி நாட்கள் விடுமுறை, மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படுவதற்கு மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு ஏற்ப வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும் இந்த நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது தொடர்வில் முன்னதாக மாநில இடைக்கால சுல்தான், துங்கு மாக்கோத்தா இஸ்மாயில் மற்றும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று இன்று ஜோகூர் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.








