நாளை திங்கட்கிழமை கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்ற வேளையில், அந்த ஆட்சிக்குழுவில் பெர்சத்துவிற்கு போதுமான பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால் பெர்சத்து கட்சி அதிருப்தியில் உள்ளதாக பெரித்த ஹரியான் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் பெர்சத்திவிற்கு 5 பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை மிக குறைவான, மூன்றே பதவிகள் பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் , இந்த ஒதுக்கீட்டில் பெர்சத்துவிற்கு உடன்பாடு இல்லை என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.








