Oct 17, 2026
Thisaigal NewsYouTube

செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
செல்வாக்குமிகுந்த அரசியல்வாதியின் வீட்டில் மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கம் மீட்பு

கோலாலம்பூர், அக்டோபர் 14-

நாட்டில் செல்வாக்குமிக்க அரசியவாதி ஒருவரின் பாதுகாப்பான இல்லமாக இருந்த கோலாலம்பூரில் உள்ள அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM மேலும் 3 லட்சத்து 21 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை மீட்டுள்ளதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் அந்த அரசியல்வாதியின் வீட்டிலிருந்து 50 லட்சம் வெள்ளி மதிப்புடைய வெளிநாட்டுப் பணம் கைப்பற்றப்பட்டது.

இந்த சோதனைகள் யாவும் கோலாலம்பூரிலும், சிலாங்கூரிலும் உள்ள அந்த அரசியல்வாதியின் இரு இல்லங்களில் நடத்தப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

அண்மையில் இருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து அந்த வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கைதானவர்களில் ஒருவர், சிலாங்கூர் மந்திரி பெசார் வாரியத்தின் முன்னாள் அதிகாரி ஆவார்.

சிலாங்கூர் முதலீட்டு துணை நிறுவனத்தின் கீழ் மணல் சுரங்க குத்தகை தொடர்பில் லட்சக்கணக்கான வெள்ளி ஊழல் விவகாரம் காரணமாக அவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →