Nov 19, 2025
Thisaigal NewsYouTube
எஸ்பிஆர் முடிவுக்கு பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்படுகிறது
அரசியல்

எஸ்பிஆர் முடிவுக்கு பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்படுகிறது

Share:

கோத்தா கினபாலு, நவம்பர்.18-

வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா சட்டமன்றத் தேர்தலில் சிலாம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதிலிருந்து பிகேஆர் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அப்துல் ஹாலிம் சிஃபெக் குலாம் விலகிக் கொண்ட போதிலும் அவரின் பெயர் வாக்குச் சீட்டில் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் எடுத்துள்ள முடிவுக்கு பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்படுவதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

வேட்புமனுத் தாக்கலுக்குப் பிறகு வேட்பாளர்களிள் பெயர் பட்டியல் தேர்தல் அதிகாரிகளால் உறுதிச் செய்யப்பட்ட பின்னர் வாக்குச் சீட்டில் அவர் பெயர் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது தேர்தல் சட்டம் வலியுறுத்துவதை சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.

Related News