Jul 2, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மியின் புதிய அரசியல் பயணம்: மலேசிய ஐக்கியக் கட்சியைக் கைப்பற்றினர்
அரசியல்

ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மியின் புதிய அரசியல் பயணம்: மலேசிய ஐக்கியக் கட்சியைக் கைப்பற்றினர்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே.17-

அமைச்சரவையிலிருந்து விலகி ஓராண்டு கடந்த நிலையில், பிகேஆர் கட்சியைச் சேர்ந்த தலைவர்களான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி மற்றும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரும், மலேசிய ஐக்கியக் கட்சி எனப்படும் MUP-யை தங்களது புதிய அரசியல் தளமாக ஏற்றனர்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது, இன்று பெட்டாலிங் ஜெயா நிகழ்த்துக்கலை மையத்தில் நடைபெற்ற அடையாளப்பூர்வ ஒப்படைப்பு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

MUP கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான Tan Gin Theam, கட்சியின் பதிவுச் சான்றிதழின் மாதிரிப் பிரதியை ரஃபிஸி மற்றும் நிக் நஸ்மி ஆகியோருக்கு வழங்கி அதிகாரப்பூர்வ மாற்றத்தை அறிவித்தார்.

‘Parti Bersama Malaysia’ என்றும் அழைக்கப்படும் MUP, பினாங்கைத் தளமாகக் கொண்ட, மக்களிடம் அதிகம் அறியப்படாத ஓர் அரசியல் கட்சியாகும்.

அக்கட்சியானது, கடந்த 2016-ஆம் ஆண்டு, டிசம்பர் 2-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகப் பதிவுச் செய்யப்பட்டது.

இதற்கிடையில், இந்த அறிவிப்பானது, இன்று ஜோகூர் பாருவில் நடைபெற்று வரும் பக்காத்தான் ஹராப்பான் மாநாட்டுடன் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் முதல் பக்காத்தான் ஹராப்பான் மாநாடு இதுவாகும்.

பிகேஆர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான ரஃபிஸி ரம்லியும், நிக் நஸ்மியும், கடந்த 2025-ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த பிகேஆர் உட்கட்சித் தேர்தலுக்குப் பிறகு ஏற்பட்ட பூசல் காரணமாக, தங்களது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு  வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை வீழ்த்த பாரிசான் நேஷனலுக்கு வாக்களிக்க பாஸ் அழைப்பு: அம்னோ பாராட்டு!

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்