Dec 21, 2025
Thisaigal NewsYouTube
கல்வி துணை அமைச்சருக்கு தெரியாமலேயே அப்கானிஸ்தான் கல்விக்குழுவை வரவேற்றது எப்படி?
அரசியல்

கல்வி துணை அமைச்சருக்கு தெரியாமலேயே அப்கானிஸ்தான் கல்விக்குழுவை வரவேற்றது எப்படி?

Share:

கோலாலம்பூர், நவ. 21-

கல்வி துணை அமைச்சர் வோங் கா வோவிற்கு தெரியாமலேயே ஆப்கானிஸ்தான் கல்வி தலைமை இயக்குநர் தலைமையிலான அந்நாட்டின் கல்வி பேராளர்கள் குழுவை கல்வி அமைச்சு வரவேற்றது எப்படி, உபசரணை வழங்கியது எவ்வாறு, கல்வி சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து கல்வி அமைச்சர் ஃபாட்ஹ்லினா சீடேக் விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிஏபி தலைவர் லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவுடன் தூதரகத் தொடர்பில் இல்லாத தலிபான் தலைமையிலான ஆப்பானிஸ்தான் கல்விக்குழுவை மிக தடபுடலாக உபசரித்து, கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்து, அனுப்பி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று பகான் நாடாளுமன்ற உறுப்பினரான லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார்.

மிக கமக்கமாக நடத்த ஆப்கானிஸ்தான் கல்விப் பேராளர்கள் குழு வருகை குறித்து கல்வி அமைச்சு எதுவுமே அறிவிக்காத நிலையில், தமது நாடாளுமன்றத் தொகுதியான நிபோங் திபாலில் நடந்த ஒரு நிகழ்வில் நிருபர்கள் எழுப்பிய கேள்வியின் போதுதான் ஆப்கானிஸ்தான் கல்விக்குழு வருகையை கல்வி அமைச்சர் ஃபாட்ஹ்லினா சீடேக் ஒப்புக்கொண்டுள்ளார்.

தனது நாட்டில் பெண்கள் கல்விக் கற்கக்கூடாது என்று நீண்ட காலமாகவே பிற்போக்கான, பழமை வாய்ந்த சிந்தனையில் ஊறி, திளைத்து இருக்கும் தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் நாட்டின் கல்விக்குழுவுடன் மலேசியாவிற்கு அப்படி என்ன தொடர்பு வேண்டியுள்ளது என்று பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் மனித உரிமை குறிப்பாக பெண்களின் கல்வி தொடர்பான விவகாரங்களில் அதிக அக்கறை காட்டி வருகின்ற ஓர் அரசியல்வாதி என்ற முறையில் ஆப்கானிஸ்தான் கல்வி பேராளர்கள் குழுவின் வருகையை தாம் கடுமையாக கருதுவதாக லிம் குவான் எங் குறிப்பிட்டார்

பெண்கள் இடைநிலைக்கல்வி பயிலவும், பல்கலைக்கழகம் போன்ற உயர்க் கல்விக்கழகங்களுக்கு செல்லவும் முற்றாக தடை விதித்திருக்கும் ஒரு நாட்டிலிருந்து கல்வி தொடர்பான பரிமாற்றத்தில், மலேசிய கல்வி அமைச்சு எதனை அறிந்துக்கொள்ளப் போகிறது என்பதையும் லிம் வினவினார்.

டிஏபி.யை சேர்ந்த துணை கல்வி அமைச்சராக இருக்கும் வோங் கா வோவிற்கு தெரியாமலேயே மிக கமக்கமாக நடந்துள்ள ஆப்கானிஸ்தான் கல்வி பேராளர்கள் குழு வருகை குறித்து, கல்வி அமைச்சர் என்ற முறையில் ஃபாட்ஹ்லினா சீடேக் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்