Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு பிரதமர் அன்வார் இரங்கல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு பிரதமர் அன்வார் இரங்கல்

கோலாலம்பூர், டிச.31-


அமெரிக்க அதிபர்களுள் நீண்ட காலம் உயர்வாழ்ந்தவர் எனக் கருதப்பட்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் மறைவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

ஜிம்மி கார்ட்டர், கடந்த டிசம்பர் 29 ஆ ம் தேதி தனது 100 ஆவது காலமானார். கடந்த 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அதிபாக இருந்த ஜிம்மி கார்ட்டர், 2002 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபர் பரிசை வென்றார்.

அமெரிக்காவிற்கும், மனித உரிமைக்கும் மாறுப்பட்ட அணுகுமுறையை வெளிப்படுத்தியவர் ஜிம்மி கார்ட்டர் என்று டத்தோஸ்ரீ அன்வான் புகழாஞ்சலி சூட்டினார். அவரின் மறைவிற்கு தாமும், தமது சகாக்களும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →