கோத்தா கினபாலு, நவம்பர்.23-
சபா மாநில நம்பிக்கைக் கூட்டணி இன்று தனது 8 அம்சக் கடப்பாட்டு அறிக்கையை வெளியிட்டது. இது மக்களின் நலன், உள்கட்டமைப்பு மேம்பாடு, நிர்வாகச் சீர்திருத்தம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. சபாவுக்கான 40 விழுக்காடு நிதி உரிமையை மீட்பதில் பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உறுதியான நிலைப்பாட்டை சபா நம்பிக்கைக் கூட்டணி தலைவர் டத்தோ முஸ்தஃபா சக்மூட் வரவேற்று, இந்த உரிமையைச் சரியாக நிர்வகிக்க தாங்கள் உறுதியளிப்பதாகக் கூறினார்.
சபாவின் 40 விழுக்காடு உரிமையை முழுமையாக மக்கள் அனுபவிப்பதை உறுதிச் செய்ய, 10 முக்கிய முன்னுரிமைகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன. இவை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 'ஹராப்பான்' என்ற வழிகாட்டி கொள்கைகளின் மூலம் செயல்படுத்தப்படும். இந்த வாக்குறுதிகளில், நிலையான நீரை உறுதிப்படுத்த அணைகள் கட்டுதல், தகுதியான மாணவர்களுக்கு இலவச உயர்க்கல்வி வழங்குதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 100 ரிங்கிட் நிதி உதவி, சபா இறையாண்மை வள நிதியம் அமைத்தல் ஆகியவை அடங்கும்.








