நாட்டின் அரச பரிபாலனத்தின் அடையாளமாக விளங்குகின்ற ஆட்சியாளர்களை நிந்திக்கும் தன்மையில் வெளியிடப்படும் எந்தவொரு உரையும், அறிக்கையும், மன்னிப்பு என்ற ஒரு சொல்லின் மூலம் நிவாரணம் தேடி விட முடியாத என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.
ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனை என்பது குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டதாகும். குற்றம் இழைத்ததாக கூறப்படும் நபர்களை விசாரணை செய்வதற்கும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், உரிய தண்டனை அளிக்கப்படுவதற்கும் நடப்பு சட்டங்கள் வகை செய்வதாக அமைச்சர் அஸாலினா குறிப்பிட்டார்.
அந்த வகையில் ஆட்சியாளர்களை நிந்தித்து விட்டு, அதற்கு மன்னிப்பு கோருவது மூலம் தீர்வு காண முனைவது என்பது சட்ட ரீதியாக ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருக்க முடியாது என்று சட்ட வல்லுநருமான அஸாலினா ஓஸ்மான் தெளிவுபடுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
