நெகிரி செம்பிலானில் பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் மத்திய போலீஸ் நாளை விசாரணை நடத்தவுள்ளது.
சிரம்பானில் அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளதாக, இவ்விவகாரம் தொடர்பான வட்டாரத்தை மேற்கோள்காட்டி எஃப்எம்டி செய்தி வெளியிட்டுள்ளது.
புக்கிட் அமான் அதிகாரி ஒருவர் நெகிரி செம்பிலானுக்குச் சென்று விசாரணை நடத்தவுள்ளதாகவும், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்தது.
இந்த விசாரணை மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசமைப்பு நெருக்கடியுடன் தொடர்புடையதா என்பது குறித்து போலீஸ் தரப்பு உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக, நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர், 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் நியமனங்களையும் உடனடியாக ரத்து செய்தார்.
அவர்கள் ஆகஸ்ட் 7 ஆம் தேதி எடுத்த பதவிப் பிரமாணம் மற்றும் ஆட்சியாளருக்கான விசுவாச உறுதிமொழியை மீறியதாக அரண்மனை தெரிவித்தது.








