கடந்த சனிக்கிழமை நடந்த கெமாமான் இடைத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு ஆதரவு பெருக வில்லை என அம்னோவின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சஹிடி ஹமிடி உறுதியாகக் கூறுகிறார்.
மாறாக, அத்தொகுதியில் அம்னோவின் 10 ஆயிரம் வாக்காளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
68.3 விழுக்காடு அம்னோ வாக்காளர்கள் மட்டுமே அந்த இடைத்தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் ஒப்பிடும்போது, பாஸ் கட்சிக்கு ஆதரவு கூடி இருப்பதாகட் தெரிவிக்கப்படுவதில் உண்மை இல்லை என ஸாஹிட் விளக்கினார்.
டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சம்சுரி மொக்த்தாரின் வெற்றியை ஒரு அளவுகோலாக மதிப்பிட முடியாது. கெமாமானில் 141,000 வாக்காளர் இருக்கிறார் எனக் கூறி பகல் கனவு காண வேண்டாம் என பாஸ் கட்சிக்கு ஸாஹிட் ஹமிடி நினைவுறுத்தினார்.








