கோலாலம்பூர்,ஜூலை 14-
இதுவரை பெர்சது கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த டத்தோஸ்ரீ அகமது பைசல் அசுமு, தன்னுடைய பதவியை தற்போதைய கட்சியின் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின்க்கு வழிவிட முடிவெடுத்துள்ளார்.
இந்த முடிவு குறித்து தான் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ முகைதீன் யாசின் கலந்துரையாடி விட்டதாகவும், ஹம்சா கட்சியின் துணைத் தலைவராக பொறுபேற்க வேண்டும் என கட்சியின் உறுப்பினர்களும் விரும்புவதால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அகமது பைசல் அசுமு பத்திரிக்கையாஅளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
கட்சி மீதான பற்றும் கட்சிக்கான தன் சேவையும் ஆதரவும் வழக்கம் போல வழங்கி பணியாற்ற அவர் உறுதியளித்ததுள்ளார்.








