Oct 30, 2025
Thisaigal NewsYouTube
புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க பால் யோங் விண்ணப்பம்
அரசியல்

புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்க பால் யோங் விண்ணப்பம்

Share:

புத்ராஜெயா,அக்டோபர் 11-

பேரா மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், முன்னாள் டிஏபி உறுப்பினருமான பால் யோங், பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 8 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படித் தண்டனையை எதிர்த்து செய்து கொண்டுள்ள ஆகக்கடைசியான மேல்முறையீடு இம்மாதம் 23 ஆம் தேதி கூட்டரசு நீதிமனறத்தில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில் தமக்கு எதிரான பாலியல் பலாத்கார வழக்கில் புதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கப் போவதாக பால் யோங், செய்து கொண்டுள்ள விண்ணப்பத்தைத் தொடர்ந்து அவருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை, கூட்டரசு நீதிமன்றம் நவம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனை பால் யோங் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போ டீக் உறுதிப்படுத்தியுள்ளார்.

பேரா, ட்ரோனோஹ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான 54 வயது பால் யோங், கடந்த 2019 ஆம் ஆண்டு ஈப்போவில் உள்ள தனது வீட்டில் 23 வயது பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் புரிந்த குற்றத்திற்காக ஈப்போ உயர் நீதிமன்றத்தில் 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
பின்னர் அந்த தண்டனை, அப்பீல் நீதிமன்றத்தில் 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

Related News