கோலாலம்பூர், அக்டோபர்.17-
பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக் கட்சியாக நீடிப்பதும் வெளியேறுவதும் மஇகாவைப் பொறுத்தது என்று அதன் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி இன்று தெரிவித்துள்ளார்.
பாரிசான் நேஷனல் கதவு திறந்த நிலையில் உள்ளது. மஇகா பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவதைத் தடுக்காது.
கூட்டணியில் சேரவோ அல்லது வெளியேறவோ கூறும் கட்சிகள் மீது எந்த வற்புறுத்தலும் இல்லை என்பதைக் கருத்தில் கொண்ட பின்னரே இந்த அணுகுமுறை எடுக்கப்பட்டது என்று அஹ்மாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் மஇகா பேராளர் மாநாட்டில் பேராளர்கள் விவேகமான முடிவை எடுப்பார்கள் என்று தாம் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.