அரசியல் பிரச்சார மேடைகளில் தொடர்ந்து இனம், மதம், அரசக் குடும்பம் தொட்டு பேசியுள்ள கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ கட்சியின் தலைவrரும் நாட்டின் துணை பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
சனூசி பரப்பிய அவதூறுக்கு, சிலாங்கூர் மாநில சுல்தானிடம் கேட்ட மன்னிப்பு போதுமானது அல்ல. மாறாக அவர் மீது சட்டப்பூர்வமான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசார் இந்த விவகாரம் குறித்து சரியான விசாரணை நடத்துவர் என தான் எதிர்ப்பார்ர்கப்படுவதாக அவர் கூறினார். அரசியல் பிரச்சார மேடைகளில் இனம், மதம், அரச குடும்ப விவகாரங்கள் தொட்டு பேசக்கூடாது என மலேசிய அரசப் போலீஸ் படத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் கோரியிருந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் சனூசி இந்த தொடர்ச்சியான அவதூறு செயல் ஆரோக்கியமானது அல்ல என சாஹிட் கூறினார்.