Sep 28, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவு
அரசியல்

நெகிரி ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்க உத்தரவு

Share:

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் 10 பேரின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் தமக்கு இன்று கிடைத்ததாக, லெங்கெங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ முஹமட் அஸ்னா அமீன் தெரிவித்தார்.

தமக்கு வழங்கப்பட்ட கடிதத்தை முன்னதாக முழுமையாகப் படிக்கவில்லை என்றாலும், வாகனங்களைத் திரும்ப ஒப்படைக்குமாறு கூறப்பட்டுள்ளதால், அவற்றில் உள்ள தமது தனிப்பட்ட பொருட்களை அகற்றிவிட்டு வாகனங்களை ஒப்படைக்கப் போவதாக அவர் கூறினார்.

தற்போது தமது லெங்கெங் தொகுதி சேவை மையத்திலிருந்தே பெரும்பாலும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் முஹமட் அஸ்னா தெரிவித்தார்.

மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் விஸ்மா நெகிரியில் உள்ள தங்களது அலுவலகங்களுக்குள் நுழைய வாய்மொழி உத்தரவு மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

Related News

நாடாளுமன்றம் கலைந்ததும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் வெளியேறும் - ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

நாடாளுமன்றம் கலைந்ததும் ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் வெளியேறும் - ஸாஹிட் ஹாமிடி திட்டவட்டம்

மலாக்கா தேர்தலில் நீதியே பிகேஆர் கட்சியின் அடிப்படை தாரக மந்திரம் - டாக்டர் வான் அஸிஸா திட்டவட்டம்

மலாக்கா தேர்தலில் நீதியே பிகேஆர் கட்சியின் அடிப்படை தாரக மந்திரம் - டாக்டர் வான் அஸிஸா திட்டவட்டம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு: ஸாஹிட் ஹாமிடி, இஸ்மாயில் லாசிம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசனை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு: ஸாஹிட் ஹாமிடி, இஸ்மாயில் லாசிம் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆலோசனை

மலாக்கா தேர்தல் கூட்டணி குறித்து உயர்மட்டக் குழு முடிவு - ஸாஹிட் ஹாமிடி தகவல்

மலாக்கா தேர்தல் கூட்டணி குறித்து உயர்மட்டக் குழு முடிவு - ஸாஹிட் ஹாமிடி தகவல்

நெகிரி செம்பிலான் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்களிடம் போலீஸ் விசாரணை

மலாக்கா தேர்தலில் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு

மலாக்கா தேர்தலில் பாஸ் சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு