Oct 28, 2025
Thisaigal NewsYouTube
லிங்கி, கம்போங் பாரிசானின் கோழிப்பண்ணையால் துர்நாற்றம்: வீரப்பன் உடனடி நடவடிக்கை
அரசியல்

லிங்கி, கம்போங் பாரிசானின் கோழிப்பண்ணையால் துர்நாற்றம்: வீரப்பன் உடனடி நடவடிக்கை

Share:

லிங்கி, நவ. 16-

நெகிரி செம்பிலான், லிங்கி, கம்போங் பாரிசானில் செயல்பட்டு வரும் கோழிப்பண்ணையினால் ஏற்பட்டுள்ள துர்நாற்றம் குறித்து ஓரிட மக்களிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

பொதுமக்களின் புகார் குறித்து, சம்பந்தப்பட்ட கோழிப்பண்ணை வளாகத்தில் போர்ட்டிக்சன் நகராண்மைக்கழக அமலாக்க அதிகாரிகள் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி சோதனை மேற்கொண்டதாக வீரப்பன் குறிப்பிட்டார்.

லாடாங் என்.எஸ். அக்ரிகல்ச்சர் என்ற அந்த கோழிப்பண்ணை வளாகம், உரிமமின்றி, கடந்த 14 ஆண்டு காலமாக செயல்படுகிறது என்றும், போர்ட்டிக்சன் நகராண்மைக்கழகத்தின் அதிகார செயல்பாட்டுப்பகுதிக்கு அப்பாற்பட்டுள்ள பகுதியில் வீற்றிருக்கிறது என்பதும், விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில தொழில்முனைவோர், மனித வளம், பருவநிலை மாற்றம் மற்றும் பயனீட்டாளர் துறை ஆட்சிக்குழு உறுப்பினருமான வீரப்பன் தெரிவித்தார்.

தவிர அந்த கோழிப்பண்ணை, கிழம் கோழிகள், முட்டைகள், கோழி சாணம் முதலியவற்றை விற்பனை செய்து வருகிறது. எட்டு லட்சம் கோழிகள் வளர்க்கப்படும் அந்தப் பண்ணையில், நாள் ஒன்றுக்கு 100 கோழிகள் வீதம் இறந்து போகின்றன. அவற்றை புதைப்பதற்கு பிரத்தியேக குழி ஒன்றை கொண்டுள்ளது. துர்நாற்றம் வீசாமலும், கிருமியைக் கொல்வதற்கும் சுண்ணாம்புக்கலவையை பயன்படுத்தி வருகிறது என்று பண்ணை உரிமையாளர் விளக்கம் அளித்து இருப்பதாக வீரப்பன் சுட்டிக்காட்டினார்.

அதற்கான துர்நாற்றம் இல்லாததை பண்ணையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகளும் கண்டறிந்துள்ளனர். இதன் தொடர்பில் மேலும் விபரங்களை பெறுவதற்கு கடந்த நவம்பர் 11 ஆம் தேதி தாமே நேரடியாக களத்தில் இறங்கி ஆராய்ந்து, நிலைமைய கண்டறிந்ததாக வீரப்பன் தெரிவித்தார்.

பண்ணையாளருடன் நடத்தப்பட்ட சந்திப்பில் நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டலைப்பின்பற்றும்படி தாம் அறிவுறுத்தியதாகவும், அந்தப் பண்ணையில் சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டுள்ள அந்நியத் தொழிலாளர்களின் இருப்பிட தங்கும் வசதியும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக விரப்பன் குறிப்பிட்டார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!