Oct 30, 2025
Thisaigal NewsYouTube
அவர் பெண் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை
அரசியல்

அவர் பெண் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 23-

அடுத்த மாதம் 28 ஆம் தேதி நடைபெறவிக்கும் ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்ற இடைத் தேர்தலில் அம்னோ மகளிர் பிரிவைச் சேர்ந்தவர்தான் போட்டியிட வேண்டும் என்ற கட்டாயமில்லை என்று கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் தெரிவித்துள்ளார்.

அந்த தொகுதியில் அம்னோ மகளிர் பிரிவை சேர்ந்தவர் போட்டியிட்டு, வென்றுள்ளார் என்ற போதிலும், நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் அத்தொகுதியில் அம்னோவை சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர்தான் கட்டாயமாக நிறுத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் ஹசான் மேற்கண்டவாறு கூறினார்.

இடைத்தேர்தலில் நிறுத்தப்படவிருக்கம் வேட்பாளரின் தேர்வு மிக முக்கியமாகும். கட்சியின் வெற்றிக்கு அது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

இருந்த போதிலும் அந்த தொகுதியில் மகளிர் பிரிவைச் சேர்ந்தவர் போட்டியிட்டதால் அது குறித்து கட்சியின் உயர் மட்ட அளவில் விவாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related News