Dec 16, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மாரடைப்பு வரலாம்
அரசியல்

பிகேஆர் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மாரடைப்பு வரலாம்

Share:

ஜோகூர் பாரு, மே.21-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கானத் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்குப் போட்டியிடும் தாம், வெற்றி பெற்றால் மாரடைப்பு வரலாம் என்று கட்சியின் நடப்புத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேசியத் துணைத் தலைவர் தேர்தலில், கட்சியின் உதவித் தலைவரும், கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியுமான நூருல் இஸாவிடம் இருந்து கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ள தாம், தோல்வி அடைவது திண்ணம் என்று ரஃபிஸி ரம்லி திட்டவட்டமாக அறிவித்தார்.

காரணம், இந்த முறை நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் அனைத்துமே முன் ஏற்பாடாகச் செய்யப்பட்டு விட்டன. எனவே தாம் தோல்வி அடைவது உறுதி என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

இத்தகையக் கடும் பலப்பரீட்சைக்கு மத்தியில் களம் இறங்கியுள்ளத் தாம், துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றால், அது இன்ப அதிர்ச்சி மட்டுமல்ல, மாரடைப்பு வந்தாலும்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று நகைச்சுவை இழையோட ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.

Related News