Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது

கோலாலம்பூர், ஜன.4-


நாளை மறுநாள் ஜனவரி 6 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் பேரணி ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பேரணியில் பங்கேற்பது மூலம் ஒற்றுமை அரசாங்கத்தில் ஓர் உறுப்புக்கட்சி என்ற முறையில் நடப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தவறாக வியக்கியாணம் செய்ய வேண்டுடிய அவசியமில்லை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

இது சில தரப்பினரால் பரப்பிவிடப்படும் தவறான வியக்கியாணமாகும் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தினார்.

டத்தோஸ்ரீ நஜீப் ஒரு காலத்திற்கு பாரிசான நேஷனலுக்கு தலைமையேற்று, நாட்டை வழிநடத்திய ஒரு தலைவர் ஆவார். அதுமட்டுமின்ற நீண்ட காலம் நாட்டிற்காக சேவையாற்றியவர்.

பிரதமராக டத்தோஸ்ரீ நஜீப் நாட்டிற்கு தலைமையேற்று நிறைய பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரின் சேவை
நினைவுகூரப்படுவதற்கும், அவருக்கு தார்மீக ஆதரவு நல்குவதற்கும் இந்தப் பேரணியில் கலந்து கொள்வது மூலம் ஒற்றுமை அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். என்று தவறாக வியக்கியாணம் செய்ய வேண்டி அவசியமில்லை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் விளக்கினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →