ஜோகூர் பாரு, ஜூலை.12-
நேற்று நடைபெற்ற 16-வது ஜொகூர் மாநிலத் தேர்தலில், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியானது கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
போட்டியிட்ட 33 தொகுதிகளிலும் அக்கூட்டணியானது தோல்வியைத் தழுவியுள்ளது.
இத்தேர்தலில், பெர்சாத்து சார்பில் 16 வேட்பாளர்கள், பாஸ் கட்சி சார்பில் 11 வேட்பாளர்கள், மலேசிய இந்தியர் மக்கள் கட்சி சார்பில் 5 வேட்பாளர்கள், பெஜூவாங் கட்சி சார்பில் ஒரு வேட்பாளர் என மொத்தம் 33 வேட்பாளர்களை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி களமிறக்கியிருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ முடிவுகளின் படி, அக்கூட்டணியானது புதிய தொகுதிகளை வெல்லத் தவறியதோடு, கடந்த 2022 -ஆம் ஆண்டு, ஜோகூர் மாநிலத் தேர்தலில் வென்றிருந்த புக்கிட் கெப்போங், மஹாராணி மற்றும் எண்டாவ் ஆகிய மூன்று தொகுதிகளையும் பெரிக்காத்தான் நேஷனல் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








