மலிவு விலை வீடுகள் நிர்மாணிப்பு – 5 இலட்சம் வீடுகள் என்ற இலக்கையும் தாண்டியது.
பாதிக்கப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு வெற்றிகரமாக மறுவாழ்வு அளிக்கப்பட்டது.
• மொத்தம் 1,726 வீடமைப்புத் திட்டங்கள் மீட்டெடுக்கப்பட்டன.
• இதன் மூலம் 199,643 வீடுகள் பயனடைந்தன.
மக்கள் நட்பு வீடமைப்புத் திட்டத்தின் கீழ் 6,545 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
• கிராமப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்து ஆலயங்கள் உள்ளிட்ட இந்து அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பழுதுபார்க்கவும் பராமரிக்கவும் RM156.8 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.
a. மொத்தம் 1,319 வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் இந்த நிதி வழங்கப்பட்டது.
b. இந்து ஆலயங்கள், சீனக் கோயில்கள், குருத்வாராக்கள் மற்றும் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்க இந்நடவடிக்கை உதவியது.
இந்தியர் குடியிருப்புப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக RM20 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
• இந்தியர் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடும் அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.
மக்கள் வீடமைப்புத் திட்டம் (PPR), மக்கள் குடியிருப்புத் திட்டமாக (PRR) உருமாற்றம்.
• நவீன வசதிகளுடன் கூடிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் வசதியான பொது வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கும் நோக்கில் இந்த உருமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.








