Oct 17, 2026
Thisaigal NewsYouTube

உள்நாட்டு பச்சரிசியின் உச்சவரம்பு விலை மறு ஆய்வு அவசியம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உள்நாட்டு பச்சரிசியின் உச்சவரம்பு விலை மறு ஆய்வு அவசியம்

கோலாலம்பூர், நவ.12-


உள்நாட்டு பச்சரிசி உச்சவரம்பு விலை மறு ஆய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக விவசாயம், உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

விலை கட்டுப்பாடு, போட்டித்தன்மைமிக்கதாக இல்லை என்பதால் சந்தைகளில் உள்நாட்டுப் பச்சரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது என்று அதன் உற்பத்தியாளர்கள் கருதுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

2008 ஆம் ஆண்டு தொடங்கி, உள்நாட்டுப் பச்சரிசி உச்சவரம்பு விலை, கிலோவிற்கு 2 ரிங்கிட் 60 காசு வீதம் நிர்ணயிக்கப்பட்டது. நியாயமான விலையில் மக்கள் அரிசியை வாங்குவதற்கு ஏற்ப இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

ஆனால், அப்போது ஒரு டன் அரிசி விலை 900 ரிங்கிட்டாக இருந்தது. தற்போது

அதன் விலை டன்னுக்கு 1,300 வெள்ளியாக இருக்கிறது என்று முகமட் சாபு சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →