Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பிகேஆரில் இணைவது சொந்த முடிவாகும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிகேஆரில் இணைவது சொந்த முடிவாகும்

கோலாலம்பூர், மே.31-

அம்னோவிலிருந்து விலகி, பிகேஆரில் இணைவது தனது சொந்த முடிவாகும் என்று வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

யாரும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அல்லது வற்புறுத்தலினால் பிகேஆரில் இணையவில்லை என்று தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

அம்னோவிலிருந்து விலகியிருக்கும் தனது நடவடிக்கை குறித்து அதிகமாகப் பேச விரும்பவில்லை என்றும், தாம் எடுத்துள்ள இந்த முடிவு, சாதாரணமானது அல்ல என்றும், ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் தெங்கு ஸாஃப்ருல் தெரிவித்தார்.

பிகேஆர் கட்சியில் இணையும் தனது நோக்கத்தை அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தாம் தெரியப்படுத்தியிருப்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →