பாஸ் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகியவற்றுடன் இணைந்து அரசியல் போராட்டக்களத்திற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது திரும்பியுள்ளார் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு தங்களுடன் இணைந்திருந்த துன் மகாதீர், அதே உத்வேகத்தில் தங்களுடன் மீண்டும் இணைந்து இருப்பது புதிய உற்சாகத்தை அளித்துள்ளது என்று ஹாடி அவாங் வர்ணித்துள்ளார்.
கடந்த வாரம் கோத்தாபாருவில் பாஸ் கட்சியின் அரசியல் நிகழ்வில் கட்சியின் அங்கியை அணிந்த நிலையில் துன் மகாதீர் உரை நிகழ்த்தியிருப்பது பழைய வரலாறு திரும்பியிருப்பதாக ஹாடி அவாங் குறிப்பிட்டார்.
கடந்த 1969 ஆம் ஆண்டு மே கலவரத்திற்கு பின்னர் சிலாங்கூர், காப்பாரில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பாஸ் கட்சி மேடையில் துன் மகாதீர் உரையாற்றியதற்காக அவர் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதாக ஹாடி அவாங் நினைவுகூர்ந்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
