கோலாலம்பூர், நவம்பர்.08-
சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக.வின் சின்னமான ராக்கெட் பயன்படுத்தப்படாது என்று அதன் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பானில் உள்ள உறுப்புக் கட்சிகளான பிகேஆர் மற்றும் அமானா ஆகியவை பயன்படுத்தவிருக்கும் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தையே ஜசெக பயன்படுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
வரும் 29 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா மாநிலத் தேர்தலில் ராக்கெட் சின்னத்தைப் பயன்படுத்துவதா அல்லது பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தைப் பயன்படுத்துவதா? என்பது குறித்து மாநில ஜசெக.வில் நடைபெற்ற விவாதத்தில் வேட்பாளர்கள் அனைவரும் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.








