Oct 11, 2026
Thisaigal NewsYouTube

ரஃபிஸி ரம்லிக்கு முக்கியப் பதவி வழங்கப்படலாம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரஃபிஸி ரம்லிக்கு முக்கியப் பதவி வழங்கப்படலாம்

ஷா ஆலாம், மே.27-

பிகேஆர் கட்சியின் பிரச்சாரப் பீரங்கி என்று வர்ணிக்கப்பட்டுள்ள கட்சியின் முன்னாள் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபிஸி ரம்லியை கொத்திக் கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் காத்திருக்கும் இவ்வேளையில், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது மத்திய செயலவை உறுப்பினர் என்று ஏதாவது ஒரு பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை பிகேஆர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களைக் கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் சந்திக்கவிருப்பதை கட்சியின் முதலாவது உதவித் தலைவரும், சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தினார்.

ரஃபிஸியின் பங்களிப்பு குறித்து அந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →