பெரிக்காத்தான் நேஷனல் மீதான இடைநீக்கம் நீடித்தால், மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் பாஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கலாம் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் அனைத்து கட்சிகளும் ஒரே சின்னத்தில் போட்டியிடுவது ஒற்றுமையை வெளிப்படுத்தும் என்றும், அது பாஸ் சின்னமாகவோ மற்றொரு கூட்டணிக் கட்சியின் சின்னமாகவோ இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
மலாக்கா சட்டமன்றம் கடந்த 23ஆம் தேதி கலைக்கப்பட்ட நிலையில், தேர்தல் முக்கிய தேதிகளை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் அக்டோபர் 7ஆம் தேதி கூடுகிறது.








