Jun 25, 2026
Thisaigal NewsYouTube
நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்
அரசியல்

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

Share:

பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா அன்வார் விலகிவிட்டதாகப் பரவும் தகவல்களை அக்கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நூருல் இசா ராஜினாமா செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் "பொய்யானவை" என்று கட்சியின் தகவல் தொடர்புப் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில், அப்போதைய பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லியைத் தோற்கடித்து நூருல் இசா 2025-2028 தவணைக்கான துணைத் தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

அந்தத் தேர்தலில் தோல்வியுற்றதைத் தொடர்ந்து ரஃபிஸி ரம்லி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News