நவ.22-
அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஐந்து நாடுகளுக்கு மேற்கொண்ட அதிகாரத்துவப் பயணத்திற்கு ஏற்பட்ட மொத்த செலவினத்தில் அரசாங்கம் 16 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் அல்லது 27 விழுக்காட்டுத் தொகையை மட்டுமே ஏற்றுக்கொண்டுள்ளது என்று அரசாங்கப் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஐந்து நாடுகளில் பயணத்திற்கு உண்மையான செலவினம் 61 லட்சத்து 62 ஆயிரம் ரிங்கிட்டாகும். இதில் 27 விழுக்காட்டுத் தொகையை மட்டுமே அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. எஞ்சியத்தொகையை இந்த பயணங்களில் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களே ஏற்றுக்கொண்டுள்ளன என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபாஹ்மி விளக்கினார்.
இதில் பிரதமரின் விமானப் பயணத்திற்கான அனைத்து செலவினத்தை அரசாங்கமே ஏற்றுக்கொண்டுள்ளது. இதனை எந்தவொரு நிறுவனமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபாஹ்மி தெளிவுபடுத்தினார்.








