Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் பிரதமர் பதவிக்கு முஹைதீன்! பெர்சத்து கட்சி அதிரடித் தீர்மானம்!
அரசியல்

மீண்டும் பிரதமர் பதவிக்கு முஹைதீன்! பெர்சத்து கட்சி அதிரடித் தீர்மானம்!

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.07-

நாட்டின் அடுத்த பிரதமராக டான் ஸ்ரீ முஹைதீன் யாசீன் மீண்டும் வர வேண்டும் என பெர்சத்து கட்சியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி, முஹைதீன் யாசின் கட்சியின் தலைவராகவும் நீடிக்க வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் ஒருமித்த ஆதரவு தெரிவித்ததாகக் கூறினார்.

இந்த அதிரடித் தீர்மானமானது, கடந்த சில நாட்களாக முஹைதீனின் தலைமைக்கு எதிராக எழுந்த சர்ச்சைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. இந்தத் தீர்மானம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'பொருத்தமான நேரத்தில், எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் இது குறித்துப் பேசுவார்' என முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

Related News

மீண்டும் பிரதமர் பதவிக்கு முஹைதீன்! பெர்சத்து கட்சி அதிரட... | Thisaigal News