Aug 28, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் தனித்துப் போட்டியிட வேண்டும்: வீ கா சியோங் வலியுறுத்தல்
அரசியல்

மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில் பாரிசான் நேசனல் தனித்துப் போட்டியிட வேண்டும்: வீ கா சியோங் வலியுறுத்தல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.07-

நடைபெறவுள்ள மலாக்கா மற்றும் ஜோகூர் மாநிலத் தேர்தல்களில், பாரிசான் நேசனல் கூட்டணி தனது சொந்த சின்னத்தின் கீழ் தனித்துப் போட்டியிட வேண்டும் என மசீச தலைவர் டத்தோ ஶ்ரீ வீ கா சியோங் வலியுறுத்தியுள்ளார்.

மசீச-வின் 77-வது ஆண்டு நிறைவு விழாவில் இன்று உரையாற்றிய அவர், இந்த இரண்டு மாநிலங்களிலும் முன்னதாக பாரிசான் நேசனல் தனித்து வெற்றி பெற்றதைச் சுட்டிக் காட்டினார். தற்போது ஜோகூர் மாநிலம் பாரிசான் நேசனல் தலைமையிலும், மலாக்கா மாநிலம் ஒற்றுமை அரசாங்கத்தின் கீழும் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

"வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில், பாரிசான் நேசனல் தனது சொந்தக் கொடியின் கீழ் போட்டியிட்டு, தனித்து ஆட்சி அமைப்பதற்கான ஆணையை வாக்காளர்களிடம் கோருவதே நியாயமானது மற்றும் சரியானது," என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

Related News