தேச நிந்தனை சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டுவதற்காக கெடா மந்திரி பெசாரும், பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி முகமட் நூரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முதல் நாள் அவரை தொடர்புகொள்ள இயலவில்லை என்று போலீஸ் தரப்பு கூறியுள்ள வாதத்தை அந்த கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் மறுத்துள்ளார்.
ஒரு மாநில மந்திரி பெசாரை அதிகாலை 3 மணியளவில் கைது செய்து இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியதாகும் என்று ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.
போலீசாரின் கைப்பேசி அழைப்பை சனூசி புறக்கணித்து விட்டதன் காரணமாக அவரை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர் என்றும், அதிகாலை 3 மணியளவிலேயே அவரை கண்டு பிடிக்க முடிந்தது என்றும் போலீஸ் தரப்பு கூறும் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று முன்னாள் உள்துறை அமைச்சருமான ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.
சனூசிக்கு பாதுகாப்பு அளிக்கும் மெய்க்காவலர், அரச மலேசிய போலீஸ் படையைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில் சனூசியுடன் போலீஸ் தொடர்பு கொள்ள இயலவில்லை, அவரை கண்டு பிடிக்க முடியவில்லை, அதனால்தான் அதிகாலை 3 மணியளவில் கைது நடவடிக்கை நடைபெற்றது என்று என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்று ஹம்சா ஜைனுடின் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை


