ஜோகூர் பாரு, ஜூலை.12-
பக்காத்தான் ஹராப்பானின் வலிமைமிகுந்த வேட்பாளர் என்று கருதப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக், தாம் போட்டியிட்ட புத்ரி வங்சா தொகுதியில் மகத்தான் வெற்றி பெற்றுள்ளார்.
டாக்டர் மஸ்லீ மாலிக்கிற்கு 41,821 வாக்குகளும் மசீச.வை சேர்ந்த பாரிசான் நேஷனல் வேட்பாளர் Teow Chia Ling – விற்கு 36,077 வாக்குகளும் கிடைத்தன.
கடந்த தேர்தலில் மூடா கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் அமீரா அயிஷா அப்துல் அஸிஸ் வெற்றிப் பெற்ற இத்தொகுதியை முதல் முறையாக பக்காத்தான் ஹராப்பான் கைப்பற்றியுள்ளது.
பரிசான், பெர்சாமா, மூடா, பெபாஸ் என 5 முனைப் போட்டி நிலவிய அத்தொகுதியில், டாக்டர் மஸ்லீ மாலிக் 5,744 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.








